விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று…. மனிதாபிமானம் இல்லாமல் சோதனை செய்வதாக அதிமுக குமுறல்…!

Published : Oct 18, 2021, 10:47 AM IST
விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று…. மனிதாபிமானம் இல்லாமல் சோதனை செய்வதாக அதிமுக குமுறல்…!

சுருக்கம்

விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான கல்குவாரி, கல்லூரிகள், நிறுவனங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்தூரை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 40-க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

விஜயபாஸ்கரின் இழுப்பூர் வீடு, சென்னையில் உள்ள அவரது இல்லம், மேலும் அவரது தந்தை, சோகதரர், தங்கை ஆகியோரது வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இந்தநிலையில் அதிமுக-வை பழிவாங்கவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பாபுவேல், அதிமுக பொன்விழா கொண்டாடி எழுச்சிபெறும் நேரத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து சோதனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளன. இந்தநிலையில் மனிதாபிமானம் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக பாபு முருகவேல் கூறியுள்ளார். விஜயபாஸ்கரின் சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக அதிமுக வழக்கறிஞர் செல்வம் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!