விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறாரா..? தங்க தமிழ்செல்வன் அதிரடி விளக்கம்!

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 10:27 AM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளித்துவருகிறார்கள். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரி, கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார். 
 

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளரா என்பது பற்றி அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளார் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளித்துவருகிறார்கள். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரி, கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார். 
எனவே விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறப்படுவாரா என்பது பற்றி திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க  தமிழ்செல்வன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் விளக்கி உள்ளார்.
 “உதயநிதியை மீடியாக்கள் எம்.எல்.ஏ.வாக ஆக்காம விடமாட்டார்கள் போலிருக்கிறது. திமுகவில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. உதயநிதி போட்டியிட வேண்டும் என்று திமுக தொண்டர் விருப்ப மனு அளித்திருக்கிறார். பொதுவாக மாநில பொறுப்பில் உள்ளவர்களுக்கு தொண்டர்கள் விருப்ப மனு அளிப்பது வழக்கம்தான். உதயநிதியின் வெல்விஷர் என்ற அடிப்படையில்தான் கள்ளக்குறிச்சி எம்.பி. விருப்ப மனு அளித்திருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளார் யார் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ஒரு வேளை உதயநிதி ஸ்டாலினை கட்சி களமிறக்கினால், அவரை யாரும் வாரிசு வேட்பாளராகப் பார்க்க மாட்டார்கள். அவரையும் திமுகவின் தொண்டராகவே பார்ப்பார்கள்” என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். 

click me!