ஜெயலலிதா இருந்தா இந்த வன்முறை நடக்குமா.. ஸ்டாலின் ஆட்சியை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளும் சசிகலா.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2022, 6:30 PM IST
Highlights

திமுக ஆட்சியில் நடக்கும் அராஜகம் அவலம் திராவிடர்கள் ஆகிய நாம் அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சியில் நடக்கும் அராஜகம் அவலம் திராவிடர்கள் ஆகிய நாம் அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீட்டுக்கட்டு விட்டத் என விமர்சித்துள்ள சசிகலா இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:- 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் ஒருவரை வாளால் வெட்ட ஓடி ஓடி அறிவாலயம் வீசிய சம்பவம் சமூக வலைதளத்தில் தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது.

இதையும் படியுங்கள்: “ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

இதேபோல் பாலக்காடு அலுவலகத்தில் பொதுமக்கள் நேரில் வந்து  தீர்த்தகிரி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள நீண்ட நேரம் மின்வெட்டுக்கு என்ன காரணம் என விசாரித்த பெண்மீது மின்வாரிய ஊழியர் மீட்டரை தூக்கி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுக்கு மூச்சு திராவிட மாடல் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவினர் ஆட்சியின் இது போன்ற அவலம் தொடர்கிறது. இது போன்ற செயல்களை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை  பார்ப்பது திராவிடர்களாகிய  நாம் அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் பார்க்க முடிந்ததா?

இதையும் படியுங்கள்: அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

இதுபோல் யாரும் செய்யத் துணிவார்களா? ஆனால் தற்போதைய ஆட்சியில் சர்வ சாதாரணமாக இதுபோல் அராஜக செயல்கள் ஏன் நடக்கிறது? திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் எளிதில் தப்பித்து விடலாம் என நினைப்பதால்தான் இவ்வாறு செய்கிறார்களா என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். நாளுக்கு நாள் இந்த ஆட்சியில் இதுபோன்ற அவலங்கள் நடப்பது கவலையளிக்கிறது. இது போன்ற செயல்களை ஆட்சியில் இருப்பவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? அப்படி என்றால் இதற்கெல்லாம் ஒரே தீர்வு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சியை விரைவில் அமைப்பதுதான். இவ்வாறு அதில் சசிகலா கூறியுள்ளார்.

 

click me!