வரும் 2ம் தேதி வெற்றி நடையா..? விடியலா..? விளங்காமல் தவிக்கும் அதிகாரிகள்..!

Published : Apr 26, 2021, 01:31 PM IST
வரும் 2ம் தேதி வெற்றி நடையா..? விடியலா..? விளங்காமல் தவிக்கும் அதிகாரிகள்..!

சுருக்கம்

தலைமைச்செயலகத்தில் முக்கிய பொறுப்புகளைப் பிடிப்பதற்கும், அமைச்சர்களிடம், பி.ஏ., பதவிகளைப் பிடிப்பதற்கும், 'தாஜா' வேலையில் இறங்கி இருக்கிறார்கள். சில பேர், தேர்தல் செலவுக்கு பணம் எல்லாம் கொடுத்து உதவி இருக்கிறார்கள். 

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க., தான் வெற்றி பெறும். எந்தத் துறைக்கு யார் யார் அமைச்சர் என்றெல்லாம், சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. பத்தாண்டுகளாகக் காய்ந்து கிடந்த, தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் பலரும், தலைமைச்செயலகத்தில் முக்கிய பொறுப்புகளைப் பிடிப்பதற்கும், அமைச்சர்களிடம், பி.ஏ., பதவிகளைப் பிடிப்பதற்கும், 'தாஜா' வேலையில் இறங்கி இருக்கிறார்கள். சில பேர், தேர்தல் செலவுக்கு பணம் எல்லாம் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.

 

தி.மு.க., வெற்றி பெறுமா? தோற்குமா எனத் தெரியாமலே, இந்த அதிகாரிகள் இப்படி செய்திருக்கிறார்கள். ஒருவேளை, தி.மு.க., வெற்றிபெற்றால் இது சாத்தியமாகலாம். தமிழக - கேரள இரு மாநில எல்லை பகுதி என்பதால் பொள்ளாச்சி, பல்வேறு வகையில் அரசு அதிகாரிகளுக்கு வருமானம் கொட்டித் தரும் ஊராக இருக்கிறது. 

இதனால் பெரும் தொகை கொடுத்து, அனைத்து துறை அதிகாரிகளும், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்கள். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கவலையில், இடம்பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆட்சி மாறி விட்டால், கொடுத்த காசு வீணாகி விடும் என்பதால், வசூல் வேட்டையில் தீவிரமாக இருக்கிறார்கள். தேர்தல் ரிசல்டுக்காக கட்சியினர் மட்டுமல்ல, அதிகாரிகளும் தூக்கம் தொலைந்து கிடக்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு