நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.. கடையடைப்புக்கு தயாராகும் வணிகர் சங்கம்.!!

By T BalamurukanFirst Published Jun 11, 2020, 9:33 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அவரவர் வீட்டிற்கு சென்று கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.சென்னை முழுவதும் நாள்தோறு குறைந்தது ஆயிரம் பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். சென்னை தான் தற்போது தமிழக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முதலிடம் பிடிக்க முன்னேறிக்கொண்டிருக்கிறது.

திமுக நடத்திய "ஒன்றினைவோம் வா" நிகழ்ச்சியில் தீவிரமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கிவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு தமிழக அரசுக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கொரோனா பரவலை தடுக்க 15 நாள் கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா பரவலை தடுக்க முழுஊரடங்கு அமல்படுத்த திட்டம் ஏதும் இருக்கிறதா என்று தமிழக அரசு பதிலளிக்குமாறு கேள்வி எழுப்பியிருக்கிறது. நாளை தமிழக அரசு பதிலளிப்பதை பொறுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா.? என்று தெரியவரும். 

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 15 நாள்களுக்கு கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.விக்கிரமராஜா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வணிகர்களின் பிரச்னைகள், அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக கூடுதல் முதன்மை செயலாளரிடம் வழங்கினார்.

 செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, கொரோனா தொற்று சென்னையில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழக அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி சென்னையில் முழுமையாக குறைந்தது 15 நா கண்டிப்பாக முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வணிகர்கள் குழு ஒத்துழைப்பையும் அளித்து கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.அரசு உரிய கவனம் செலுத்தி நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

click me!