பிரதமர் மோடி பிறந்த நாளின் மாட்சியை குறைப்பதா..? சமூக நீதி நாள் அறிவிப்பதா.? கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்.!

By Asianet TamilFirst Published Sep 8, 2021, 8:59 PM IST
Highlights

பெரியாருக்கும் சமூக நீதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

திருச்சி சிறுகனூரில் பெரியார் சிலையை வைக்கக் கூடாது என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பெரும்பான்மைனோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி, இந்து மக்களின் தெய்வ நம்பிக்கைகளைப் புண்படுத்தி பிரச்சாரம் செய்தவர் பெரியார். உருவ வழிபாட்டையும் எதிர்த்தவர் பெரியார். எனவே, அவருக்கு திருச்சி சிறுகனூரில் சிலை வைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. இங்கு சிலை வைக்க அளித்த அனுமதியை அரசு திரும்ப பெற வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியின் மாட்சியைக் குறைக்கும் வேலையிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அன்றைய தினம் வேண்டுமென்றே சமூக நீதி நாளாகக் கடைப்பிடித்து, உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருக்கிறார். இதையும் திரும்பப் பெற வேண்டும். ஜாதி வாரியாக சலுகை வேண்டும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொன்னவர்தான் பெரியார். அவருக்கும் சமூக நீதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவருடைய பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற உத்தரவையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

click me!