ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா.? சஸ்பென்ஸ் வைத்து பேசும் ஜெயக்குமார்.!

By Asianet TamilFirst Published Jul 2, 2022, 10:43 PM IST
Highlights

ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ்ஸை அழைப்பு குறித்து கட்சி முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த சின்ஹா களம் இறங்கியுள்ளார். இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று வருகிறார்கள். யஷ்வந்த சின்ஹா ஏற்கனவே சென்னைக்கு வந்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் திரெளபதி முர்மு இன்று புதுச்சேரி மற்றும் சென்னைக்கு வந்து ஆதரவு திரட்டினார். 

இதையும் படிங்க: கழக சட்ட விதிகளின்படி இன்றுவரை அதிமுக ஒங்கிணைப்பாளர் நான் தான்.. மாஸ் காட்டிய ஓபிஎஸ்.

சென்னையில் அதிமுக தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுவாக எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை உருவாக்கிவிட்டு, தற்போது நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் ஓ. பன்னீர்செல்வம் கூறுவதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? பொதுக்குழு கூடுவதற்கு முதல் நாள், நீதிமன்றம் சென்று விடிய விடிய இருந்து ஒரு உத்தரவைப் பெற்று வந்தது யார்? கட்சியின் பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் சென்னைக்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!

ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் சென்று 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதுவும் பொதுக்குழுவில் விவாதிக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றது யார்? கட்சித் தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக ஓபிஎஸ் அண்ணான் இருந்தார். இப்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அவர் கூறுவது எல்லாம் தொண்டர்களை ஏமாற்றுகிற செயலாகத்தான் பார்க்க முடியும். அனைவருமே பொதுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள்தான். கட்சியின் பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் தலைமைக் கழக கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தோம். அப்படி இருந்தும் ஓபிஎஸ் வரவில்லை. ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் கோட்டையில் வேட்டை... கெத்து காட்டும் எடப்பாடியார்..!
 

click me!