2 டைம் ஒத்தி வச்சாச்சு…. இன்றைக்காவது லாலு பிரசாத் யாதவின் தண்டனை விவரம் அறிவிக்கப்படுமா ?

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
2 டைம் ஒத்தி வச்சாச்சு…. இன்றைக்காவது லாலு பிரசாத்  யாதவின் தண்டனை விவரம் அறிவிக்கப்படுமா ?

சுருக்கம்

Will Lalu Prasad Yadav punishment be declared today?

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தண்டனை குறித்த விவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் தண்டைனை அறிவிக்கப்பட உள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான  லாலு பிரசாத் யாதவ் மற்றும் பலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு  நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பளித்தார்.

அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை.  பின்னர் நேற்று முன்தினம் வழங்கப்படும் என நீதிபதி அறிவித்ருந்தார்.

இதையடுத்து  லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக நேற்று முன்தினமும் தண்டனை விவர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த 11 பேரின் தண்டனைக்கான வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று  பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி சிவபால் சிங் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!