திமுக என்னை அடக்கிடுச்சா..?? ஐயோ ஐயோ... உ.பிக்களுக்கு சவால்விட்ட மாரிதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 2:15 PM IST
Highlights

திமுகவில் கூட திராவிட சித்தாந்தத்தை பிடித்தோ அல்லது பெரியார் சித்தாந்தத்தை பிடித்து பேசக்கூடிய நேர்மையாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஆதரிக்கிறார்கள் நான் ஒரு சித்தார்த்துடன் நிற்கிறேன். 

எத்தனை மிரட்டல்கள் கொடுத்தாலும் சரி, எத்தனை ரவுடி வேலை செய்தாலும் சரி, திமுக உடனான சண்டையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை என மாரிதாஸ் கூறியுள்ளார். மாரிதாஸ் அடங்கிவிட்டார், திமுக அவரை அடக்கி விட்டது என சமூக வலைத்தளத்தில் கருத்து பரவி வரும் நிலையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

 திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் உள்ளிட்டோர் தொடர்ந்து திமுகவையும் அதன் தலைவர் மு. க ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக எடுக்கும் ஒவ்வொரு  நடவடிக்கைகளும் விமர்சிக்கப்பட்ட வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்று பிரச்சாரம் தேர்தலுக்கு முன்பாக இவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையிலும், மாரிதாஸ் போன்றவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்து இருக்கிறது. சமீபத்தில் பாதுகாப்பு படை தலைவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக மாரிதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு பிரிவினையை தூண்டும் வகையிலான அவரது கருத்து இருப்பதாக கூறி அவர் மீது கைது நடவடிக்கை எடுத்தது. தேசிய பாதுகாப்பு சட்டம் அவர்மீது பாய்ச்சப்பட்டது, இதுதொடர்பாக வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது அவர் மீதான வழக்கை ரத்து செய்யப்பட்டது.இ இதேபோல்  தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி  மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்திலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருந்தார், அதேபோல் கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாகவும் இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்கும் வகையில் டுவிட்டரில் வீடியோ பதிவிட்டதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரிலும் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த வழக்குகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அந்த வழக்குகளில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  நான் சிறையில் இருந்த காலத்தில் மாரிதாஸ் அடங்கிவிட்டார் திமுக மாரிதாசை அடக்கி விட்டது என்று பலர் பேசத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், தேர்தலுக்கு முன்பாகவே இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன், திமுக எந்தவித மிரட்டல் கொடுத்தாலும் சரி, எந்தவித ரவுடி வேலை பார்த்தாலும் சரி, இந்த சண்டையில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இப்போது நான் சொல்லிக் கொள்கிறேன் திமுகவின் பணபலம் என்ன எனபது தெரியும், திமுகவின் ஆட்பலம் என்ன என்பதும் தெரியும், திமுகவின் ரவுடி வரலாறு என்ன என்பதும் தெரியும், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக தனது அடக்குமுறையை எவ்வளவு காட்ட முடியும் என்பதும் தெரியும்,  இது எல்லாம் தெரிந்துதான் களத்தில் நிற்கிறேன், திமுகவுடனான இந்த சண்டையில் இருந்து ஒரு இன்ச் கூட பின்வாங்கப் போவதில்லை. திமுக மாரிதாஸை அடக்கிவிட்டது, மாரிதாஸ் அடங்கிவிட்டார் என்று திமுக வட்டத்திற்குள் பேசிக் கொள்வதற்கு வேண்டுமானால்  குஷியாக இருக்கலாம், இந்த சண்டையில் எந்த சமரசமும் இருக்கப்போவது இல்லை.

திமுகவில் கூட திராவிட சித்தாந்தத்தை பிடித்தோ அல்லது பெரியார் சித்தாந்தத்தை பிடித்து பேசக்கூடிய நேர்மையாளர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஆதரிக்கிறார்கள் நான் ஒரு சித்தார்த்துடன் நிற்கிறேன். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி குடும்பம் திமுகவை கைப்பற்றி வைத்திருப்பதும், அவர்கள் அரசியலை மாற்றி அமைப்பதும், ஒரு கட்டமைப்பை  மொத்தமாக கைப்பற்றி திமுகவை தங்களது குடும்ப சொத்தாக மாற்றி முழுக்க முழுக்க அடிமை சாம்ராஜ்யமாக அதை மாற்றி வைத்திருப்பது மட்டுமல்லாமல், தமிழகத்தையே ஒட்டுமொத்த அடிமை கூடாரமாக மாற்ற முயற்சி  செய்யும் போக்கு முற்றிலுமாக வீழ்த்தப்பட வேண்டிய போக்கு. இதில் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் இந்த கும்பல் இதை மட்டும் செய்யவில்லை, இந்துக்களுக்கு எதிராக இந்தியாவுக்கு எதிராக,  தீவிரமான பிரச்சாரங்களையும் அதற்கான முன்னெடுப்புகளையும், அதற்குப்பின்னால் இருக்கக்கூடிய இயக்கங்களையும் ஆதரிக்கிறது. அதுபோல இருக்கக் கூடிய மோசமான பிரிவினைவாத கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்க கூடிய  கும்பல்தான் இந்த திமுக கும்பல்.

திமுக என்ற கட்சியை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் கொள்ளை அடித்தும், அடித்த கொள்ளையை பிரிப்பதும் இதுதான் திமுக. இதுதான் அந்த கட்சிக்கு இருக்கிற கொள்கை, இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நமது முன்னோர்கள் போராடி சுதந்திரம் பெற்று தந்த இந்த தேசத்தை இந்த கட்சி ஒட்டுமொத்தமாக கெடுக்கும் கட்சியாக பார்க்கிறேன். சிறையில் இருந்து விடுதலையாகி இத்தனை நாட்களாகியும் ஏன் மாரிதாஸ் வீடியோ போடவில்லை என்று கேட்கிறார்கள், நான் விடுதலையாகி வந்த பிறகு பல சொந்த வேலைகளையும் செய்ய வேண்டிய இருந்தது. என்னுடைய கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது, ஏனக்கு எதிராக செய்யப்பட்டுள்ள சதிகள் என்ன என்பதை ஆராய நேரம் எடுத்துக் கொண்டது என அவர் விளக்கமளித்துள்ளார். 
 

click me!