திமுக முதல்வராக கனிமொழிக்கு இடஒதுக்கீடு தருவார்களா..? காயத்ரி ரகுராம் பதிலடி..!

By Thiraviaraj RMFirst Published Sep 21, 2021, 1:42 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. 

திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா? என திமுக எம்.பி., கனிமொழிக்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கருப்பு கொடியேந்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். திமுக எம்.பி.யும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ’’ஊரக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வர வேண்டும் என்பதே திமுகவின் நிலைபாடு என தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம்  தனது ட்விட்டர் பதிவில், “திமுகவில் முதல்வராக இருக்க உங்களுக்கு இட ஒதுக்கீடு தருவார்களா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!