பொங்கலுக்கு பல லட்சம் மக்கள் ஊருக்கு சென்றதால் கொரோனா அதிகரிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?

By vinoth kumarFirst Published Jan 18, 2022, 1:09 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழ்நாட்டில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர்.

பொங்கலுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஊருக்கு சென்றதால், பாதிப்பு அதிகரிக்குமா என்பது இரு நாட்களில் தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கு 'இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்ககளுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்;- தமிழ்நாட்டில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழ்நாட்டில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தற்போது 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர்.

சென்னையில் 22 கண்காணிப்பு பரிசோதனை மையங்கள் 6ம் தேதியில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனை மையத்தில் மட்டும் 456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்களை மருத்துவமனைக்கும் வீட்டு தனிமைப்படுத்தி கொள்பவர்களை வீட்டு தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமாக 41 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் 6 அல்லது 7 சதவீதம்  பேர் மட்டும் படுக்கை வசதிகளை பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார். தமிழகத்தில் மொத்தமாக 1.92 லட்சம் படுக்கைகள் இருந்தாலும் அதில் 9 ஆயிரம் பேர் படுக்கைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும். நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் வீரர்கள் தோற்று பாதிக்கப்பட்டாலும் அதில் பெரும்பாலும் அறிகுறி இல்லாதவர்கள் வீடுகளையே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

பொங்கலுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஊருக்கு சென்றதால், கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பது இரு நாட்களில் தெரியவரும். மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்படும் என  மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!