
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் அலங்கார ஊர்தி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்ததன் காரணமாக நிராகரிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு திமுக எம்.பி கனிமொழி, மதுரை எம்.பி சு. வெங்கடேசன், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இதுதொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது’ என்று கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.