அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் அதிமுக தோற்குமா..? தமிழக அமைச்சர் விளக்கம்..!

Published : Jan 10, 2021, 09:27 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் அதிமுக தோற்குமா..? தமிழக அமைச்சர் விளக்கம்..!

சுருக்கம்

அதிமுக கூட்டணியால் பாஜக இருந்தால் அதிமுக அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  

தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்.  அதிமுக கூட்டணியால் பாஜக இருந்தால் அதிமுக அதிமுக தோற்கும் என்ற கருத்து முற்றிலும் முரணானது. தமிழகத்தில் நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தல் என்று வரும்போது மக்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. சசிகலா விடுதலையாகி வெளியே வரட்டும் பார்க்கலாம்.” என்று ஒ.எஸ். மணியன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!