மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறப்போகிறது... நடிகை குஷ்பு அதிரடி கணிப்பு..!

Published : Jan 10, 2021, 09:13 PM IST
மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறப்போகிறது... நடிகை குஷ்பு அதிரடி கணிப்பு..!

சுருக்கம்

மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியை போலவே தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பாஜகவுக்கு கிடைக்கபோகிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.   

தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு புதுக்கோட்டையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்தியாவில் பாஜகவை பார்த்து கட்சிகள் பயந்து ஓடுகின்றன. மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியைபோலவே தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பாஜகவுக்கு கிடைக்கபோகிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்” என்று குஷ்பு பேசினார்.

 
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை கூட்டணியில் ஏற்கவில்லை என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் உரிய முறைப்படி தலைமைதான் முடிவு செய்து பதில் சொல்வார்கள். அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசியது குறித்து மாநில தலைவர் முருகன் பதில் அளிப்பார். பாஜக தேசிய தலைவர் தமிழகம் வந்த பிறகு கூட்டணி முடிவாகுமா என்பது எனக்கு தெரியாது.


கருணாநிதி தலைமையில் இருந்த திமுகவுக்கும் தற்போதுள்ள திமுகவுக்கு வேறுபாடு உள்ளது. அதனால் திமுகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வேன். பொங்கல் திருநாளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் இருக்கும். கூட்டணி முடிவாகி அறிவிக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று எனக்கு தெரியாது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். ரஜினியை அரசியலுக்கு வர பாஜகதான் நிர்பந்தம் செய்தது என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது. அதை ரஜினிதான் கூற வேண்டும்.” என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!