சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக ஒப்படைப்பா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு தகவல்..!

Published : Sep 08, 2020, 05:02 PM IST
சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக ஒப்படைப்பா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 
கூறியுள்ளார்.

நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் இரண்டு குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுவின் பரிந்துரைகள் படி முடிவு எடுக்கப்படும். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் தவறிழைத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சசிகலா முதலில் சிறையில் இருந்து வரட்டும். அப்பறமாக அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை கூறலாம் என்றார் .

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!