கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்.. முதல்வர் எடப்பாடியின் அதிரடி திட்டம்..!

By vinoth kumarFirst Published Sep 8, 2020, 4:03 PM IST
Highlights

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. 

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம் பெறுவர். காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 40% மக்கள் மாஸ்க் அணிவது இல்லை; மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும். டெங்கு கொசுவைத் தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும், பேசிய முதல்வர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகிய வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும். ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

click me!