AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!

By Raghupati RFirst Published Jun 20, 2022, 12:31 PM IST
Highlights

EPS vs OPS : அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒற்றை தலைமை சர்ச்சை

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி,  உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி என அதிமுகவின் பலம் குறைந்து வருவதால்,  கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதால் அவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.  

இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்

இதனிடையே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.  இந்த விவகாரத்தில் அதிகமான தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவாக இருப்பதாகவும், இதனால் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு முகவும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க : இரட்டை இலையை முடக்கிவிடுவேன்.. இப்படி மிரட்டாதீங்க ஓபிஎஸ்.! ரகசியத்தை உடைத்த அதிமுக பிரமுகர்

உள்ளாட்சி - இடைத்தேர்தல்

இந்நிலையில், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை நடத்த வேண்டும் என்ற முழக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள, 510 உள்ளாட்சி பதவிகளுக்கு, ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இந்த சமயத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னையால் உட்கட்சி பிரச்னை விஸ்பரூபம் எடுத்துள்ளது. தேர்தல் நடக்க உள்ள, உள்ளாட்சி பதவிகளுக்கு, உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும். 

அவர்கள் கட்சி சின்னமான இரட்டை இலையில் போட்டியிட, கட்சி அங்கீகார கடிதத்தில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான படிவத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட வேண்டும். எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலில், அதிமுக போட்டியிடுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும், இந்த உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா ? என்ற கேள்வியும் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னம்

ஒருவேளை இந்த ஒற்றை தலைமை சர்ச்சை முடிந்தால், இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. இந்த சர்ச்சை தொடருமேயானால் ஓபிஎஸ் தரப்பு இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறதா ? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் முடியுமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

இதையும் படிங்க : சசிகலாவுக்கு நடந்தது தான் ஓபிஎஸ்சுக்கு நடக்கும்.. கடம்பூர் ராஜு அதிரடி - அப்போ ஓபிஎஸ் நிலைமை ?

click me!