மீண்டும் ஊரடங்கா.??? பாதுகாப்பை தீவிரப்படுத்துங்க.. பொது சுகாதாரத்துறை இயக்குனர் பரபர கடிதம்.

Published : Apr 23, 2022, 03:51 PM IST
மீண்டும் ஊரடங்கா.??? பாதுகாப்பை தீவிரப்படுத்துங்க.. பொது சுகாதாரத்துறை இயக்குனர் பரபர கடிதம்.

சுருக்கம்

அதில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் புதிய கிளஸ்டர் உருவாக்கியுள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் லேசான அறிகுறி தென்பட்டாலும் மருத்துவமனையில் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தி அனைத்து சுகாதார துறை அலுவலர்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் வைரஸ்  தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் கபளீகரம் செய்துள்ளது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்  கோடிக்கணக்கான இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை மூன்று அலைகள்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உருவாகலாம்  என சில அமைப்புகள் கணித்துள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வைரஸ் தொற்று செங்குத்தாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில்,  தற்போது மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

அதில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் புதிய கிளஸ்டர் உருவாக்கியுள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் லேசான அறிகுறி தென்பட்டாலும் மருத்துவமனையில் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தமிழக எல்லையிலேயே குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். இதுவரை முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் அதேபோல் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தற்போது தமிழக அரசு சார்பாக 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பு செலுத்தி வரும் நிலையில், அனைவரும் தடுப்புச் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதேபோல் பள்ளி கல்லூரி அலுவலகங்கள், மார்க்கெட், உணவகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும். இதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்,  மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதமாக எழுதியுள்ளார். ஊரடங்கு , முக க்வசம் போன்றவை தனிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த பொதுச் சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!