தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது..! முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..பொதுமக்கள் மகிழ்ச்சி !

By Raghupati RFirst Published Apr 23, 2022, 3:43 PM IST
Highlights

ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலக்கரி தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்திக் குறைவும் வெகுவாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில மணி நேரங்கள் மின்சாரம் ரத்தாகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மத்திய மின் தொகுப்பில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது. மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தர வேண்டிய மின்சாரம் இப்போது தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின் தடையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி  இன்று  நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும், நிலக்கரியும் வந்து சேராததே மின்சார பிரச்னைக்கு காரணம். தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் குறைவான நிலக்கரி மட்டுமே கிடைக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருகிறார். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது. தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டு மாத காலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கூடுதலாகத் தேவைப்படுகின்ற 3,000 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் முறையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது' என்று கூறினார்.

இதையும் படிங்க : கிராமத்துக்குள் பேய்.! பேய்க்கு பயந்து 2 வாரம் லாக்டவுன் போட்ட பொதுமக்கள்.! எங்கு தெரியுமா ?

click me!