கஷ்டத்தில் உடன் இருந்த மனைவி.. போலீஸ் வேலை கிடைத்தவுடன் கழட்டிவிட்டு 2வது கல்யாணம். தெருவில் குழந்தைகள்.

Published : Sep 22, 2021, 04:37 PM IST
கஷ்டத்தில் உடன் இருந்த மனைவி.. போலீஸ் வேலை கிடைத்தவுடன் கழட்டிவிட்டு 2வது கல்யாணம். தெருவில் குழந்தைகள்.

சுருக்கம்

கலாவதி அதை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஊர் பெரியவர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யப்பட்டது, அதில்  மனைவியுடன் சேர்ந்து வாழும்படி பஞ்சாயித்தார் ராமஞ்சுலுவை வலியுறுத்தினர்.

திருமணமாகி 4 குழந்தைகள் பெற்ற பின்னர் கணவனுக்கு  சிஆர்பிஎப் போலீஸ் வேலை கிடைத்த நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என அந்த பெண் துணை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கற்பழிப்பு, ஆசிட் வீச்சு, வரதட்சணை கொடுமை என பல வகைகளில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு வரும் நிலையில்,  திருமணம் செய்து கொண்ட பெண்ணை குழந்தைகளுடன் பரிதவிக்க விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்  செய்ய கணவன் முயற்சித்து வரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குர்பால்கோட்டா  மண்டலம், தம்பல்லபல்லே பகுதியை சேர்ந்தவர் கலாவதி, இவருக்கும் குண்டவாரிப்பள்ளியை சேர்ந்த  ராமஞ்சுலு என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இடையே  4 குழந்தைகள் உள்ளனர். 

மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொண்ட ராமஞ்சுலு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார், இதற்கிடையில் கடந்த ஆண்டு சிஆர்பிஎஃப் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தனது கணவனுக்கு சிஆர்பிஎப் போலீஸ் வேலை கிடைத்துவிட்டது என மனைவி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடத்திலும் கூறி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாளுக்கு நீடிக்கவில்லை, சிஆர்பிஎஃப் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ராமஞ்சுலு முற்றிலுமாக மனைவியை வெறுக்க ஆரம்பித்தார், இந்நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர் மனைவியிடம் கூறினார், ஆரம்பத்தில் மனைவி அதை நம்பவில்லை, ஆனால் ராமஞ்சுலு அதையே திரும்பத் திரும்ப கூறி வந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த மனைவி அது குறித்து விசாரித்ததில் தான் இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளதாகவும், எனவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு செல்லுமாறு அவர் நிர்பந்தித்தார்.

கலாவதி அதை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஊர் பெரியவர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யப்பட்டது, அதில்  மனைவியுடன் சேர்ந்து வாழும்படி பஞ்சாயித்தார் ராமஞ்சுலுவை வலியுறுத்தினர். ஆனால் அதை ராமஞ்சுலு பொருட்படுத்தவே இல்லை. ஆனால் இரண்டாவது திருமணம் செய்வதில் அவர் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வேறு வழியின்றி மனைவி கலாவதி தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என மதனப்பள்ளி துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். கணவனால் நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என அவர் புகார் மனு கொடுத்துள்ளார். வாழ்க்கையில் கடினமான நேரங்களில் உடன் இருந்த மனைவியை அரசு வேலை கிடைத்தவுடன் கணவன் கைகழுவ முயற்சித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!