நீட் தேர்வு வேண்டாம்... தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரா பிடிவாதம்..!

Published : Sep 22, 2021, 03:54 PM IST
நீட் தேர்வு வேண்டாம்... தமிழகத்தை அடுத்து மகாராஷ்டிரா பிடிவாதம்..!

சுருக்கம்

நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ள நானா பட்டோலி, நீட் தேர்வு சமத்துவம் இல்லாத தேர்வு என விமர்சித்துள்ளார். 

நீட் தேர்வில் மகாராஷ்டிராவுக்கு விலக்கு தேவை என வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். 

நீட் தேர்வில் இருந்து மகாராஷ்டிராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு காங்கிரஸ் தலைவர் மாநிலத் தலைவர் நானா பட்டோலி. எழுதியுள்ள கடித‌த்தில், நீட் தேர்வால் மத்திய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன் பெறுவதாகவும், மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, போலி மாணவர்கள் பங்கேற்பு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர் கதையாகி வருவதாக குறிப்பிட்டுள்ள நானா பட்டோலி, நீட் தேர்வு சமத்துவம் இல்லாத தேர்வு என விமர்சித்துள்ளார். எனவே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை மகாராஷ்டிரா அரசும் பின்பற்ற வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!