பிரதமர் மோடியை "இதுக்கு தான்" கட்டிப்பிடித்தேன்...! மனம் திறந்த பேசிய ராகுல்...!

Published : Aug 23, 2018, 02:21 PM ISTUpdated : Sep 09, 2018, 08:23 PM IST
பிரதமர் மோடியை "இதுக்கு  தான்" கட்டிப்பிடித்தேன்...! மனம் திறந்த பேசிய ராகுல்...!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கட்டி தழுவி, பின்னர் அவர் இடத்திற்கு சென்று இருக்கையைல் அமர்ந்து அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகரை பார்த்து கண் அடித்தார்.

பிரதமர் மோடியை இதுக்கு  தான் கட்டிப்பிடித்தேன்...! மனம் திறந்த பேசிய ராகுல்...! 

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கட்டி தழுவி, பின்னர் அவர் இடத்திற்கு சென்று இருக்கையில் அமர்ந்து அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகரை பார்த்து கண் அடித்தார்.

இது ஏதோ ஒரு விதத்தில் கிண்டல் செய்வது போல் இருக்கிறது என அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கினர். அதுமட்டுமில்லாமல், அன்று இரவு இது குறித்து பேசிய பிரதமர், ராகுல் காந்தி பதவிக்காக அலைபவர் என்பது போல இருந்தது அவரது நடவடிக்கை என கூறினார்.

மோடியின் இந்த விமர்சனம் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல் மோடியை கட்டிப்பிடித்து குற்றமா..? என்ற தோணியில் விமர்சனம் எழ தொடங்கியது.

இந்நிலையில், ஜெர்மனியில் நடைப்பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், உலகம் கொடுமையானது அல்ல என்பதை நிரூபிக்கவே பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததாக ராகுல் காந்தி தெரிவித்து  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த செயல் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும், அனைவரையும் அரவணைத்து செல்வது தான் இந்தியாவின் தத்துவம் என்றும் ராகுல் காந்தி தத்துவமாக பேசி உள்ளார்.

 அதை புரியவைக்கவே பிரதமரை கட்டிப்பிடித்ததாக இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!