செங்கேணிக்கு ஜோதிகானு பேர் வை.. சிவகுமார் குடும்பத்தை இழுக்கும்.. வன்னியர் கூட்டமைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2021, 11:21 AM IST
Highlights

உண்மை கதை என்றால் உண்மையான பெயர்களை வைத்து விட்டு போக வேண்டியதுதானே, அந்தோணி சாமிக்கு இப்போது குரு என பெயர் வைத்திருக்கிறார்கள், அந்தோணி சாமிக்கு ஏன் கார்த்திக் என்றோ சிவகுமார் என்றோ பெயர் வைத்திருக்க கூடாது.  

யாரோ ஒருவர் செய்த தவறுக்கு வன்னியர்களின் அடையாளமாக உள்ள ஜெ. குருவின் பெயரை வைத்து ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையும்  நடிகர் சூர்யா இழிவுபடுத்தி விட்டார் என்றும், அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். அந்தோணிசாமி என்ற பெயருக்கு  குருமூர்த்தி என பெயர் வைத்துள்ள நோக்கம் என்ற என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஏன் செங்கேணிக்கு ஜோதிகா என்று பெயர் வைக்கவில்லை என்றும் அவர் சூர்யாவை சரமாரியாக விமர்சித்துள்ளார்.  

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இந்த வரிசையில் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி  நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில், ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து, சூர்யா அவரது மனைவி ஜோதிகா இணைந்து தயாரித்து மற்றும் அகரம் அறக்கட்டளையின் செயலாளர் ஞானவேல் என்பவர் இயக்கு இந்த படம் வெளியாகி உள்ளது. வெற்ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெய்பீம் என்ற பெயரில் படம் வந்திருப்பதையும் வரவேற்கிறோம், ஆனால் இதில் சித்தரிக்கப்பட்ட விவகாரங்களும், இவர்கள் கையாண்ட முறைகளும், அதை இவர்கள் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்ட விதமும் எங்களது சமுதாய மக்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், காயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வன்னியர்களை போன்ற ஒரு பெரிய சமுதாயத்தை தாக்கினால் அது நன்கு வியாபாரம் ஆகும் என்ற உத்தியில் எடுக்கப்பட்டதாக் கூட இருக்கலாம். மொத்தம் 18 புராணங்கள் இருக்கிறது, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம், வன்னிய புராணம் என்று இருக்கிறது. அதில் எங்களது முன்னோர்கள் காலம் காலமாக அக்னிசட்டியை அடையாளமாக கொண்டுள்ளனர். அதேபோல் கம்பர் எழுதிய சிலை எழுபது எழுதிலும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் இதை உயிர்மூச்சாக தெய்வாம்சமாக நினைக்கிறோம். இந்த அக்னி சட்டியை படத்தில் வைக்கும் போது இது அப்பட்டமாக வன்னியர்களை சுட்டிக்காட்டுகிறது என்று அனைவருக்கும் தெரியும். இப்போது அந்த சின்னத்தை மட்டும்தான் நீக்கி இருக்கிறார்களே தவிர மற்ற காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கிறது. அதில் கேரக்டர் அசாசினேஷன் நடந்திருக்கிறது. சூர்யா அவர்களே.. போலீஸ்காரருக்கு குருமூர்த்தி என பெயர் வைத்து இருக்கிறீர்கள், ஆனால் நீதிமன்றத்தில் கூப்பிடும்போது குருகுரு என்று அழைக்கிறார்கள், இந்த சம்பவம் நடந்த பகுதி, அக்னி சட்டி, அந்த சமுதாயத்தில் அடையாளமாக இருக்கிற குரு இவையெல்லாம் ஒத்துப் போகிறது. இது வன்னியர்களை இழிவுபடுத்துவதை தவிர வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும். 

உண்மை கதை என்றால் உண்மையான பெயர்களை வைத்து விட்டு போக வேண்டியதுதானே, அந்தோணி சாமிக்கு இப்போது குரு என பெயர் வைத்திருக்கிறார்கள், அந்தோணி சாமிக்கு ஏன் கார்த்திக் என்றோ சிவகுமார் என்றோ பெயர் வைத்திருக்க கூடாது. பார்வதிக்கு செங்கேணி என்று பெயர் வைத்தீர்கள், ஏன் ஜோதிகா என்று பெயர் வைக்கவில்லை, உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களின் பெயரையே அதற்கு வைத்திருக்கலாமே, எனவே இதை அனைத்தையும் நீங்கள் திட்டமிட்டு செய்திருக்கிறீர்கள். இதை அந்த டைரக்டர் செய்தாரா, படக்குழு செய்ததா, இல்லை இதற்கு சூர்யாவே உடன்பட்டு செய்தாரா என்பதெல்லாம் விஷயம் அல்ல, ஆனால் இப்படி செய்யப்பட்டது எங்கள் சமுதாயத்தை காயப்படுத்தியிருக்கிறது.  இவ்வாறு சரமாரியாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!