FarmLaws: தேர்தல் பயத்தால் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்... பிரதமரை போட்டு தாக்கும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Nov 19, 2021, 11:19 AM IST
Highlights

3 வேளாண் சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக விமர்சித்து வந்தது. இப்போது திடீரென இந்த முடிவை எடுக்க தேர்தலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும். 

ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது என  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஆனால், பாஜகவின் அடிப்படை கொள்கை மாறிவிட்டதாக கருத முடியாது. பஞ்சாப் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டே 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தேர்தல் பயத்தால் எடுத்த முடிவு. ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும், 3 வேளாண் சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக விமர்சித்து வந்தது. இப்போது திடீரென இந்த முடிவை எடுக்க தேர்தலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும். கடைசியாக நடந்த மக்களவை, மாநிலங்களை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். மக்கள் இதனை உணர்த்து பாஜகவுக்கு தொடர் தோல்விகளைத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்கள் விரோதக் கொள்கைகளை எடுப்பதை நிறுத்துவார்கள்.

அதேபோல், திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில்;- விவசாயிகளிடம் எந்த கருத்துகளும் கேட்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்தான் வேளாண் சட்டங்கள். சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு 3 மாதங்கள் அவகாசம் கேட்டோம். ஆனால், ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் நிறைவேற்றியது. பஞ்சாப், உத்தரபிரதேசம் தேர்தல்களை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது வெட்கக்கேடானது. விவசாயிகளின் அயராத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி  என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

click me!