ஆணவம் தலை குனிந்தது... விவசாயிகளுக்கு வாழ்த்துக் கூறிய ராகுல் காந்தி..!

Published : Nov 19, 2021, 11:16 AM IST
ஆணவம் தலை குனிந்தது... விவசாயிகளுக்கு வாழ்த்துக் கூறிய ராகுல் காந்தி..!

சுருக்கம்

சத்தியாகிரக முறையில் நாட்டின் எளிமையான விவசாய சமூகங்கள், அதிகாரத்துவ இறுமாப்பை தலைகுனிய வைத்துள்ளனர். 


 “நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என ராகுல்காந்தி எம்.பி., தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, " இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார். இதுகுறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், " சத்தியாகிரக முறையில் நாட்டின் எளிமையான விவசாய சமூகங்கள், அதிகாரத்துவ இறுமாப்பை தலைகுனிய வைத்துள்ளனர். அநீதிக்கு எதிரான உங்களது இந்த வெற்றியை பாராட்டுகிறேன். ஜெய் கிசான் " என்று பதிவிட்டுள்ளார்.       

மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை கட்டாயம் திரும்பப்பெறும், திரும்பப் பெறும் சூழலுக்கு தள்ளிவைக்கப்படும். எனது இந்த வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! என்ற தனது முந்தைய வீடியோவை மேற்கோள் காட்டி இந்த கருத்தை தெரிவித்தார்.   அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!
Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?