தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு ஏன் அனுமதியில்லை..?? பதில் அளிக்க ராமநாதபுரம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2019, 6:30 PM IST
Highlights

பொதுக் கூட்டத்திற்கும்,  பேரணிக்கு அனுமதி கோரி ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை  எந்த பதிலும் அளிக்கவில்லை . 

பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் வருகிற 14 ஆம் தேதி  "திருவள்ளுவரின் 2050 ஆண்டின் அடைவுகள்" என்ற  நூல்   அறிமுக விழா ,  மற்றும் திருக்குறள் மாநாடு , பேரணி,  கலாச்சார நிகழ்வு  ஆகிய வற்றிற்கு அனுமதி வழங்க கோரிய  மனு  மீதான விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது அத்துடன் கூட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என ராமநாதபுரம் காவல்துறை டி.எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்யவும்  உத்தரவு. 

பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம்  மாவட்டம் சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.  அதில்  , தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் விழாவில் ,  பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ' திருவள்ளுவரின் 2050 ஆம் ஆண்டின் அடைவுகள்"   என்ற நூல்  வெளியிடப்பட்டது.   இந்த நூல்  அறிமுக விழா ,  திருக்குறள் மாநாடு ,   கலாச்சார நிகழ்வு  ஆகியவை  ராமநாதபுரத்தில் உள்ள அரண்மனை வாசலில் பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 14 ஆம் தேதி ( 14.12.19) நடத்த திட்டமிட்டு உள்ளோம்.  

இதில் தந்தை பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன்,மே பதினேழு  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி  உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக் கூட்டத்திற்கும்,  பேரணிக்கு அனுமதி கோரி ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை  எந்த பதிலும் அளிக்கவில்லை . எனவே கூட்டத்திற்கும், பேரணிக்கும் ,அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு  வழங்க உத்தரவிட வேண்டும்.  கூட்டத்தில்  எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது  என்று உறுதி கூறுகிறேன் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா,  முன்  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   பொதுக்கூட்டம்,  பேரணி , புத்தக வெளியீட்டு விழா என்று பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளது, அதனால் தான்   காலதாமதம் ஆகிறது என கூறினார்.இதைத் தொடர்ந்து நீதிபதி  பிறப்பித்த உத்தரவு:   கூட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது குறித்து , ராமநாதபுரம் காவல்துறை டி.எஸ்.பி.  பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை  டிசம்பர் 10 ஆம் தேதி  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

click me!