நீட் விலக்கு மசோதாவை நிராகரிக்க காரணம் இதுதான்.! ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம்.. திமுக அதிர்ச்சி !!

By Raghupati RFirst Published Apr 5, 2022, 11:32 AM IST
Highlights

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் சர்ச்சைகள் நிலவி வருகிறது. 

நீட் விலக்கு மசோதா :

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் முந்தைய அதிமுக அரசும் தற்போது உள்ள திமுக அரசும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. திமுக அரசு, தமிழ்நாட்டுக்கு நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பிறகு, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலி கொக்கென்று நினைத்தாய கொங்கனவா என்று விமர்சனம் செய்து தலையங்கம் எழுதியது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் முடிவெடுக்க முடியாத நிலையில், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், ஆளுநர் தாமதம் காட்டுவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் :

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில், 'பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தன்னை சந்தித்தபோது, மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு நடக்குமா ? :

நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன் என டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்திருந்தார் என்பதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு வழக்கம் போல் நீட் தேர்வு நடக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

click me!