வாலிபால் விளையாடி அசத்திய ஸ்டாலின்...! எதிரணியினர் திணறல் ..! கை தட்டி ரசித்த பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published Apr 5, 2022, 11:17 AM IST
Highlights

மக்கள் நல திட்டங்களை திறந்து வைப்பதற்காக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வாலிபால் விளையாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
 

விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு போட்டியென்றால் அதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்.. அந்த அளவிற்கு விளையாட்டு மீது ஈடுபாடு கொண்டவர் ஸ்டாலின், சென்னை மேயராக மு.க.ஸ்டாலின்  இருந்தபோது சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஆர்வமோடு விளையாடி உள்ளார். இதே போல  கார்கில் போர் நடைபெற்ற போது நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு முதல் உல கோப்பையை வாங்கி தந்த கபில்தேவ் உடன் இனைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த அளவிற்கு கிரிக்கெட் போட்டி மீது ஆர்வமோடு இருந்தவர் ஸ்டாலின், 

சமத்துவபுரத்தை தொடங்கி வைத்த  முதலமைச்சர்

இந்தநிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம்  ஒழிந்தியாம்பட்டு பகுதிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.  பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை அவர், மக்கள் பயன்பாட்டுக்காக 
திறந்து வைக்கிறார். தொடர்ந்து, 10,722 பயனாளிகளுக்கு ரூ.4269.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வாலிபால் விளையாடி அசத்திய ஸ்டாலின்

 முன்னதாக  சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு திடலை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த இளைஞர்களோடு ஆர்வமாக வாலி பால் விளையாடினார். 3 முறை வாலிபாலை முதலமைச்சர் ஸ்டாலின்  தூக்கி அடித்தார்.  அந்த பந்தை இளைஞர்கள் தடுத்து விளையாடினர். இதனையடுத்து இளைஞர்கள் அடித்த பந்து முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் வந்த போது தனது ஒரு கையால் பந்தை தடுத்து தூக்கியடித்தார். இந்த காட்சியை பார்த்த அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்களும் பொதுமக்களும் கை தட்டி ரசித்தனர்.

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி

இதனை தொடர்ந்து விழாவில் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் தந்தை பெரியார் இல்லையென்றால்  நாமெல்லோரும் இல்லை என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தின் முன்னேற்றமும் இருந்திருக்காது என கூறினார். ப்பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள்அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருப்பதாக கூறினார். 


 

click me!