என்னை எதிர்க்கும் ஆட்சியாளர்கள்.. சசிகலாவை எதிர்ப்பதில்லை ஏன்..? தினகரனின் ஓபன் டாக்..!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
என்னை எதிர்க்கும் ஆட்சியாளர்கள்.. சசிகலாவை எதிர்ப்பதில்லை ஏன்..? தினகரனின் ஓபன் டாக்..!

சுருக்கம்

why ministers did not against as much sasikala said dinakaran

தன்னை எதிர்க்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அந்த அளவிற்கு சசிகலாவை எதிர்க்காதது ஏன் என்பது தொடர்பாக தினகரன் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களும் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. அதிமுகவில் மட்டுமல்லாமல், தமிழக அரசியலிலேயே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். பின்னர், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வராவதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்த வேலையில், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சியிலிருந்து விலகி பன்னீர்செல்வம் தனித்து செயல்பட தொடங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகள் சிலரும் சில எம்.எல்.ஏக்களும் சென்றதால், பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி செயல்பட்டது.

இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பாக கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தார் சசிகலா. 

நீண்ட இழுபறிக்குப் பிறகு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்து சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு ஓரங்கட்டினர். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோரை தினகரன் கட்டுப்படுத்தியதாகவும் அவர்களை மதிக்காமல் தினகரன் அதிகார தொனியில் நடந்துகொண்டதால்தான் தினகரன் ஓரங்கட்டப்பட்டார் எனவும் அதனால்தான் சசிகலாவையும் ஓரங்கட்ட வேண்டிய சூழல் வந்ததாகவும் கூறப்பட்டது.

சசிகலாவும் தினகரனும் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டதன்பிறகும் கூட, தினகரனை சாடும் அளவிற்கு பழனிசாமியோ மற்ற அமைச்சர்களோ சசிகலாவை விமர்சிப்பதில்லை.

இதுதொடர்பாக தினகரன் விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தினகரன், சசிகலா சிறையில் இருப்பதால், அவருக்கு எதிராக ஆட்சியாளர்கள் கருத்து தெரிவிப்பதில்லை. அவர் வெளியே இருந்திருந்தால், அவரையும் விமர்சித்திருப்பார்கள் என தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!
ஈரானுடன் போருக்கு தயாரான அமெரிக்கா..! வண்டவாளம் ஏறப்போகும் வல்லரசின் பெருமை..! பீதியில் ட்ரம்பின் ராணுவம்..!