வேலூருக்கு கனிமொழி ஏன் வரல..? ஏன் பிரசாரம் செய்யல... அமைச்சர் ஜெயக்குமாருக்கு வந்த டவுட்!

By Asianet TamilFirst Published Jul 31, 2019, 9:47 PM IST
Highlights

 நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் போதிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் கனிமொழி பிரசாரத்துக்கு வரவில்லை. கனிமொழி வருவதை திமுக  தலைமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
 

வேலூர் தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழி பிரசாரம் செய்யாதது ஏன் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரம் செய்துவருகிறார்கள். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்துவருகிறார்கள். திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் பிரசாரம் செய்துவருகிறார்கள். மேலும் இரு கட்சிகளின் சார்பில் மெகா தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


அதிமுக கூட்டணியில் பாஜகவினரை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த அதிமுகவினர் தயக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள வேலூரில் பாஜகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால், அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாஜகவினரை அதிமுக அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவுக்கு ஆதரவாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திமுகவில் ஸ்டாலின், உதயநிதியைத் தாண்டி வேறு யாரும் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு முறை பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.3

 


 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் நடைபெற்ற 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கனிமொழி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், வேலூர் தேர்தலில் கனிமொழி பிரசாரம் செய்யவே இல்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துவரும் போதிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் கனிமொழி பிரசாரத்துக்கு வரவில்லை. கனிமொழி வருவதை திமுக  தலைமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் கனிமொழி பிரசாரம் செய்யாமல் இருப்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். வாணியம்பாடியில் அதிமுக. ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில்,  “வேலூர் தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழி ஏன் பிரசாரம் செய்யவில்லை.  திமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல் நடக்கிறது. அது விரைவில் வெடிக்கும்'' என்று தெரிவித்தார்.

click me!