அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு !! அதிரடி எடப்பாடி!!

By Selvanayagam PFirst Published Jul 31, 2019, 8:56 PM IST
Highlights

தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணங்களை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்கும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அரசு கேபிள் கட்டணத்தை குறைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் இன்று வெளியிட்டுள்ள  உத்தரவில், ''அரசு கேபிள் டி.வி., கட்டணம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்டு 10 முதல், கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் மாதக்கட்டணமாக செலுத்தினால் போதுமானது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35.12 லட்சம் இலவச செட் ஆப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு இடைத்தேர்தல் நடைபெற உள்ள , வேலுார் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

click me!