சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார். இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டுக்கு நேற்று இரவு வருகை தந்தார் அமித்ஷா. அவர் வருகையின் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் அமித்ஷாவை பல்வேறு பிரமுகர்கள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பைத் தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக- பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது எதுவும் நடைபெறவில்லை. ஆனால் பாஜகவோ, நீலகிரி- தென்சென்னை-வேலூர் என சில தொகுதிகளை டார்கெட் செய்து களப்பணிகளை மேற்கொள்கிறது. இதனை தொடக்கம் முதலே அதிமுக சகிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் வெல்வதுதான் இலக்கு என அதிரடியாக கூறினார்.
இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம். இதுகுறித்து கூறும் அரசியல் விமர்சகர்கள், அமித்ஷாவை இருவரும் சந்திக்க தேதி கேட்டும், கொடுக்காமல் இருந்துள்ளனர் பாஜக தரப்பு. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 25 சீட் வேண்டும் என்று கூறியிருப்பது அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கடும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதுபற்றி பல்வேறு ஊகங்கள் கிளம்ப அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதையும் படிங்க..2024 தேர்தல் முதல் ஜிஇ ஒப்பந்தம் வரை.. பிரதமர் மோடியின் அமெரிக்கா டூர் பிளான் - ஜோ பைடன் போட்ட புது ஸ்கெட்ச்
இதுபற்றி பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 3 அணிகளாக போக வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். பாஜக அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. பாஜக நிகழ்ச்சிக்காக வந்ததால் அமைச்சர் அமித்ஷா அதிமுக தலைவர்களை சந்திக்கவில்லை. அரசின் கவனக்குறைவு, நிர்வாக குளறுபடியே அமித்ஷா வருகையின்போது மின் துண்டிப்புக்கு காரணம்” என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!