விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதித்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 7, 2021, 11:49 AM IST
Highlights

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
 

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் விளக்கமளித்தார். ‘’கேரளாவில் ஓணம், பக்ரீத்துக்கு அனுமதி அளித்ததால் கொரோனா அதிகரித்தது; தொற்றை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால், மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் கொண்டாடலாம்.

 மண்பாண்ட தொழில் செய்யும் 12,000 தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாததால் ₹5000 உதவித்தொகை வழங்கப்படுகிறது; விநாயகர் சிலை செய்யும் 3,000 தொழிலாளிகளுக்கு கூடுதலாக ₹5,000 என மொத்தம் ₹10,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார். 

click me!