தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா.. ஒரு வாரத்திற்கு பள்ளியை மூட மாநகராட்சி நடவடிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2021, 11:36 AM IST
Highlights

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் ஒரு வாரம் பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி  9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் ஒரு வாரம் பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி  9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனே தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 30கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரனோ அறிகுறிகளான உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் மாணவருக்கு மேற்கொண்ட கொரனோ பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாணவியின் தந்தை அண்மையில் பெங்களூரு சென்று வந்த நிலையில் தந்தையின் வாயிலாக நோய்த்தொற்று பரவி  இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி பள்ளியில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நேரில் ஆய்வு செய்தார்.  

தொற்று ஏற்பட்ட மாணவி தொடர்பில் இருந்தவர்கள், ஆசிரியர்கள் என 103 பேருக்கு மாநகராட்சி சார்பில் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய துணை ஆணையர் மனிஷ், இதன்காரணமாக  தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் மாநகராட்சியின் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
 

click me!