
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் A.P.J.அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் பேரவையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். மேலும் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.அத்துடன் பத்திரிக்கையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற்ற நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் மறைந்த சுதந்திர போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை வைக்கப்படும். சென்னை கிண்டி மண்டபத்தில் மருது சகோகதரர்களுக்கும் சிலை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.