#BREAKING அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

Published : Sep 07, 2021, 10:51 AM IST
#BREAKING அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

சுருக்கம்

 தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

கொரோனா பேரிடரால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது ஏப்ரல் 2020 முதல் உயர்த்தப்படாமல் இருந்தது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17லிருந்து 28 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, இதை பரீசிலித்து அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் வழங்கப்பட இருந்த அகவிலைப்படியானது 3 மாதங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுவதால் அரசுக்கு கூடுதலாக 1,620 கோடி ரூபாய் அளவுக்கு செலவினம் ஏற்படும் என்று முதல் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?