உலக ஆணழகன் போட்டியில் தமிழக போலீஸ்.. அள்ளிக் கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு..

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2021, 10:16 AM IST
Highlights

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ள புருஷோத்தமன் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த முதல் காவலர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் தலைமை காவலரை பாராட்டி 1லட்ச ரூபாய் ஊக்கத்தொகையை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.சென்னை அடையாறு போக்குவரத்து காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார். 

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ள புருஷோத்தமன் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தை சேர்ந்த முதல் காவலர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள மூன்று லட்ச ரூபாய் வரை பணத்தேவை ஏற்பட்டுள்ளதால் போட்டியில் கலந்து கொள்ள தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு தனக்கு உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புருஷோத்தமனை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிலையில் தமிழக டிஜிபியான சைலேந்திரபாபு தலைமை காவலரான புருஷோத்தமனை நேரில் அழைத்து வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகையாக 1 லட்ச ரூபாயை வழங்கி உள்ளார்.

click me!