எடப்பாடியால்தான் அதிமுக ஆட்சி இழந்தது.. எகிறி அடித்த கரு .நாகராஜன்.. இதே கதிதான் ஸ்டாலினுக்கும்.. எச்சரிக்கை.

Published : Sep 07, 2021, 09:37 AM ISTUpdated : Sep 07, 2021, 09:57 AM IST
எடப்பாடியால்தான் அதிமுக ஆட்சி இழந்தது.. எகிறி அடித்த கரு .நாகராஜன்.. இதே கதிதான் ஸ்டாலினுக்கும்.. எச்சரிக்கை.

சுருக்கம்

மத்திய அரசின் அத் தாக்கீதை மேற்கோள் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழக அரசு தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

விநாயகர் சக்தி ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்  என்றும் இல்லையெனில் மு.க ஸ்டாலின்  அரசுக்கும் அவரது அரசியல் பயணத்திற்கும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் எதிர்வரும் இருக்கும் விநாயகர் செய்தி ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. விரைவில் மூன்றாவது அலை தாக்கக் கூடும் என்ற அச்சம் இருந்து வரும் நிலையிலும் இனிவரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால், மக்கள் கூடுவதை ஒவ்வொரு மாநில அரசுகளும் தடுக்க வேண்டுமென மத்திய அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. 

மத்திய அரசின் அத் தாக்கீதை மேற்கோள் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழக அரசு தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினர் என்ற போர்வையில் உள்ள கிருத்துவ பாதிரிமார்களின் வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது. ஏதோ மூலையில் கிடந்தவர்கள் எல்லாம் இப்போது பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களையும் மிக இழிவாக பேசி வருகின்றனர். அதற்கு காரணம் திமுக ஆட்சிதான் திமுக அரசு இருக்கும் தைரியம் தான். சிறுபான்மையின மக்களின் மீது உள்ள பற்று காரணமாக திமுக அவர்களை ஆதரிக்கவில்லை, அவருடைய வாக்கு வங்கிகளை குறி வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. 

சமீபத்தில் அரசை விமர்சித்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திமுகவின் ஆட்சி என்பது சிறுபான்மை மக்கள் போட்ட பிச்சை என மோசமாக பேசினார். ஆனால் திமுக அதைப் கண்டுகொள்ளவே இல்லை, கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்தார். அதனால்தான் அவர் தற்போது ஆட்சி இழந்திருக்கிறார். அதுபோலத்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்துக்களுடைய வயிற்றெரிச்சலில் நிற்க வேண்டாம். நீங்களும் விநாயகர் சதுர்த்திக்கு தடையை நீக்காவிட்டால், அது உங்கள்  ஆட்சிக்கும் அரசியல் பயணத்திற்கு நல்லதல்ல, நிச்சயம் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!