சட்டப்பேரவையில் 23-ஆம் புலிகேசி படத்தை பார்ப்பது போல உள்ளது.. மு.க.ஸ்டாலின், உதயநிதியை சீண்டிய அண்ணாமலை!

Published : Sep 06, 2021, 09:20 PM IST
சட்டப்பேரவையில் 23-ஆம் புலிகேசி படத்தை பார்ப்பது போல உள்ளது.. மு.க.ஸ்டாலின், உதயநிதியை சீண்டிய அண்ணாமலை!

சுருக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலினை  புகழ்வதைப் பார்க்கும்போது ‘23-ஆம் புலிகேசி’ படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.  

பாஜக தலைவர் அண்ணாமலை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதியைச் சீண்டத் தொடங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, “திமுகவில் பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது” என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று, “தமிழகச் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் பேசுவது 23-ஆம் புலிகேசி படம் பார்ப்பது போல உள்ளது” என்று உதயநிதியை தாக்கை விமர்சித்துள்ளார். 
இதுதொடர்பாக தருமபுரியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, “தமிழகச் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்த்தாலே  திமுகவின் 130 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். ‘23-ஆம் புலிகேசி’ படத்தை யாராவது பார்க்கவில்லை என்றால் சட்டப் பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதைப் பார்த்தலே போதும்.  மன்னா.. மன்னா.. உங்களை இப்படி புகழ்கிறார்களே மன்னா..  மக்கள் பிரச்னைகளைப் பேசாத சபையாக மாறிவிட்டது. தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலினை  புகழ்கிற சபையை வைத்துக்கொண்டு காலையிலிருந்து இரவு வரை ‘23-ஆம் புலிகேசி’ படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போல உள்ளது” என்று அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்