அரசு ஊழியர்களை அசரடிக்கும் 14 புதிய அறிவிப்புகள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 7, 2021, 11:42 AM IST
Highlights

 கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

*  அரசு ஊழியர்கள் மற்றும்   ஓய்வூதியதாரர்களுக்கு 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனால்,16 லட்சம் பேர் பயன்பெறுவர்.

*  அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

*  அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகன், மகள்கள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்.

*  அரசுக்கு 6480 கோடி ரூபாய் கூடுதல் செலவு.

*  மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை வழங்க நடவடிக்கை.

*   போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து.

*   ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

*   ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.

*  அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்.

*  சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது

*  அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

*  கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும்.

*  பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

* புதிதாக அரசு பணியில் சேருவோர், பதவி உயர்வு பெருவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும்.

click me!