ஓபிஎஸ் சென்னை  பயணம் ரத்து ஏன்? பரபரப்பு டெல்லி தகவல்கள்

First Published Jan 19, 2017, 7:28 PM IST
Highlights

டெல்லியிலேயே ஓபிஎஸ் தங்கிவிட்டதன் காரணம் என்ன , என்னதான் நடக்கிறது டெல்லியில் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

 அவசர சட்டம் கொண்டுவந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் ஜனாதிபதி ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக டெல்லியில் தங்கியிருந்து சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.


ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பீட்டா எதிர்ப்பாக மாறி , பீட்டா அமெரிக்க நிறுவனம் என்பதை அறிந்து கொள்ளும் நிலைக்கு மறியுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக நான்கு நாட்களுக்கும் மேலாக வீட்டுக்கு செல்லாமல் வீதிகளில், வாடிவாசல் முன்பு , மெரினா கடற்கரையில்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


போராட்டம் பெரிய எழுச்சியாக மாறி வருகிறது. இதன் விளைவும் முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்திக்கும் நிலை ஏற்பட்டது. 


மோடியுடனான சந்திப்பில் தமிழக பிரச்சனைகள் குறித்து காது கொடுத்து கேட்டார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது, ஆகவே மாநில அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் மத்திய அரசின் ஆதரவு உண்டு என்று மோடி தெரிவித்ததாக முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.


தமிழக அரசின் நிலை என்ன என்று விரைவில் அறிவிக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். இதன் முடிவு அவசர சட்டமா என்கிற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது,பொறுத்திருந்து பாருங்கள் என்றால் அத பொருள் அவசர சட்டமாக மட்டுமே இருக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் சென்னை திரும்பி அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்சி  சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என்கிறார்கள்.


மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர ஒத்துழைக்க வில்லை என்றாலும் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு உடனடியாக ஜனாதிபதி ஒப்புதல் வாங்கி கொடுக்கும் முயற்சியில் ஒத்துழைப்பதாக உறுதியளித்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


இதற்கு காரணம் ஒருவேலை அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தால் அதை பீட்டா போன்ற அமைப்புகள் ஜட்ஜ் வீட்டில் போய் தடை வாங்கிவிடக்கூடாது என்பதற்காக வெகு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

 
ஒரு வேலை தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கான ஜனாதிபதி ஒப்புதல் உடனடியாக வாங்கப்பட வேண்டும், அதன் பின்னர் அதில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலை வேண்டும் எனபதற்காக ஓபிஎஸ் டெல்லியிலேயே உள்ளார்.


கொல்கொத்தாவில் இருக்கும் ஜனாதிபதி நாளை டெல்லி திரும்புகிறார். சனிக்கிழமை அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்கின்றனர். இதற்கிடையே நாளை ராஜ் நாத் சிங்கையும் , சுற்றுச்சுழல் அமைச்சர் தவேவையும் சந்திக்க உள்ளனர்.


மொத்தத்தில் மாணவர்களின் போராட்டம் பெரிய அழுத்தத்தை மத்திய மாநில அரசுகளுக்கு தந்துள்ளது.  
 

click me!