ஓபிஎஸ் தமிழக பயணம் திடீர் ரத்து..!! - என்ன செய்யப்போகிறார்..???

 
Published : Jan 19, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஓபிஎஸ் தமிழக பயணம் திடீர் ரத்து..!! - என்ன செய்யப்போகிறார்..???

சுருக்கம்

தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத எழுச்சியை அடுத்து அவசர அவசரமாக பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் ஓபிஎஸ்.

ஆனால் டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வருக்கு 1% கூட நம்பிக்கை தரக்கூடிய தகவல்களை மோடி சொல்லவில்லை.

தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய ஆதரவு இல்லை என்பதாலோ என்னவோ சொல்லிவைத்தார் போல வழக்கு நிலுவையில் உள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார் மோடி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் வார்த்தைக்கு வார்த்தை  மாண்புமிகு பிரதமர் என்றாரே தவிர உருப்படியாக பதில் எதுவும் சொல்லவில்லை.

புதன் இரவு டெல்லி சென்ற ஓபிஎஸ் இன்று மதியம் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் முதலமைச்சரின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்து. மேலும் நாளைதான் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ்ஸின் பயண திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எதாவது அதிசயம் நடந்து விடாதா என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் ஆர்ப்பாட்டகாரர்கள்.

அதிசயம் நிகழ்த்துவாரா ஓபிஎஸ்...???? பொறுத்திருந்து பார்க்கலாம்...

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்