இந்து கடவுளை இழிவாக பேசியவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியும்போது கனல் கண்ணன் கைது எதற்கு.. கொதிக்கும் எச்.ராஜா

By vinoth kumar  |  First Published Aug 16, 2022, 7:01 AM IST

ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவது ஏன்? என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. திமுகவை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை!

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர்.  இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆகையால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  

இதையும் படிங்க;- பெரியார் சிலை குறித்து அவதூறு.. தலைமறைவாக இருந்த கணல் கண்ணனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!

இந்நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவரது கைதுக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கனல் கண்ணனின் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவது ஏன்? பாசிச, இந்து விரோத சக்திகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

— H Raja (@HRajaBJP)

 

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கனல் கண்ணனின் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்து கடவுள்களை இழிவாகப் பேசியவர்கள் சுதந்திரமாக திரியும் போது கனல் கண்ணனுக்கு மட்டும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவது ஏன்? பாசிச, இந்து விரோத சக்திகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!