விசாரணைக்கு ஒத்துழைத்த அர்னாப்பை கைது செய்தது ஏன்... தேசிய உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2020, 5:49 PM IST
Highlights

எல்லாவற்றிற்கும் மேலாக அர்னாப் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை எந்த ஒரு விசாரணைக்கும் அவர் தயாராக உள்ள நிலையில் அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை  செய்தி ஆசிரியர் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தேசிய உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் அர்னாப்பை கைது செய்யப்பட்டிருப்பது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறை, என்றும் இதை மகாராஷ்டிரா அரசு கைவிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். 

அன்வாய் நாயக் என்ற ஆர்க்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதில் தனது மரணத்திற்கு காரணம் என ரிபப்ளிக்  தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எனவே ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் சுஷாந்த் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிர அரசை அர்னாப் கடுமையாக சாடியும் விமரசித்து வந்தார். அதே நேரத்தில் டிஆர்பி ரேட்டிங் விவகாரத்தில் அர்னாப் முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டும் இருந்து வருகிறது. இந்நிலையில்,  

இதையடுத்து மும்பை போலீசார் அவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை 10க்கும் மேற்பட்ட போலீசார் அர்னாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்னாப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து இழுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அர்னாப் கூறுவது உண்மையில்லை என போலீசார் மறுத்துள்ளனர். பிரபல ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அர்னாப் கைது செய்யப்பட்டதற்கான காட்சிகளை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் காங்கிரசும் அதன்  கூட்டணிக் கட்சிகளும் மீண்டுமொருமுறை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப்க்கு எதிராக மாநில அரசு  அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளது இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான தாக்குதல் இந்த செயல் அவசர நிலையை நமக்கு நினைவூட்டுகிறது பத்திரிகை சுதந்திரத்திற்கு மீதான இந்த தாக்குதலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு அர்னாப்பின் கைதை கண்டித்துள்ளது.  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில்  ஊடகவியலாளர்  அர்னாப் கோஸ்வாமியை தாக்கியதுடன், அவரை வலுக்கட்டாயமாக மும்பை போலீசார் கைது செய்திருப்பதை தேசிய உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மும்பை காவல் துறைக்கு எதிராக செய்தி வெளியிட்டார் என்ற காரணத்திற்காக அர்னாப் மற்றும் அவர் தலைமை தாங்கும் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த  குழுவையும் வேட்டையாடுவதை தவிர்க்குமாறு மகாராஷ்டிர அரசிடம் கேட்டுக் கொள்கிறோம். அதேபோல காவல்துறையின் எந்த ஒரு விசாரணைக்கும் ஒத்துழைக்க எப்போதும் தயங்காது முன்வந்த ஊடகவியலாளருக்கு எதிராக அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

எல்லாவற்றிற்கும் மேலாக அர்னாப் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை எந்த ஒரு விசாரணைக்கும் அவர் தயாராக உள்ள நிலையில் அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊடகவியலாளருக்கு எதிரான இந்த கைது நடவடிக்கையை நாட்டின் அனைத்து பத்திரிக்கையாளர்களும் வேறுபாடுகளை மறந்து எதிர்க்க வேண்டும் என உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 

click me!