பதிலடி தர முடியாமல் பம்மும் திமுக... ஜெட்வேகத்தில் எடப்பாடியாரின் சாணக்கிய தனம்..!

Published : Nov 04, 2020, 05:44 PM IST
பதிலடி தர முடியாமல் பம்மும் திமுக... ஜெட்வேகத்தில் எடப்பாடியாரின் சாணக்கிய தனம்..!

சுருக்கம்

சென்னையின் மேயராக இருந்த போது ஸ்டாலினிடம் இருந்த வேகம் கூட தற்போது இல்லை என கூறுகின்றனர்.

மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, ஆரம்பத்தில் கவர்னர் ஒப்புதல் தராமல் இருந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம், 'கவர்னரிடம், அ.தி.மு.க., அரசு அடங்கி போய் விட்டது’என விமர்சனம் செய்தனர். 'ஆனால், முதல்வர் அதிரடியாக இட ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டு, கவர்னருக்கும், மத்திய அரசுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டார். வேறு வழியில்லாமல் கவர்னரும் மசோதாவுக்கு ஒப்புதல் தந்து விட்டார்.
 
இதை, முதல்வரின் ராஜதந்திரம் என, அவரை பாராட்டி, சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியினர் பதிவு போட்டு வருகிறார்கள். வழக்கமாக எதிர் லாவணி பாடுகிற தி.மு.க., தரப்பினர் பதிலடி தர முடியாமல், பம்மி விட்டார்கள்.  ஆளுநர் அதிமுக மீது கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காக அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆளுநரைச் சந்தித்தார். இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சாணக்கிய தனத்தை காட்டுகிறது என பலரும் கூறுகின்றனர். 

அதேபோல் எதிர்க்கட்சியினர் நாளுக்கு ஒரு அறிக்கை, சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து அதிமுக மீது குற்றம் சாட்டி கொண்டே இருந்தால் ஆட்சி அரியணையில் ஏற்றி விடலாம் என பகல் கனவு காண்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டலடிக்கிறார்கள். சென்னையின் மேயராக இருந்த போது ஸ்டாலினிடம் இருந்த வேகம் கூட தற்போது இல்லை என கூறுகின்றனர். இதனால் ஸ்டாலினின் நிலை அரசியலில் நாளுக்கு நாள் சறுக்கிக் கொண்டே வருகிறது என்கிறார்கள்.
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்