அதிமுக தேர்தல் வாக்குறுதியாக செல்போன் வழங்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அடடே விளக்கம்.!

By vinoth kumarFirst Published Jul 29, 2021, 11:15 AM IST
Highlights

அதிமுக கொடியை காரில் கட்டியுள்ள சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு தலைவர்கள் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. 2016 பொதுத்தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்குக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும்.

தமிழகத்தில் 95 சதவீதம் பேர் செல்போன் வைத்திருந்ததால் செல்போன் வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தங்களுடைய வீடு முன்பு கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்;- அதிமுக கொடியை காரில் கட்டியுள்ள சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு தலைவர்கள் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. 2016 பொதுத்தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்குக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஏன் வழங்கவில்லை என கேட்கின்றனர். 

பொதுமக்கள் மத்தியில் விசாரணை செய்து பார்த்ததில் செல்போன் தேவை இல்லை. அது தேவையில்லாமல் ஒன்றாக போய்விட்டது. அதனால், இந்த தேர்தல் அறிக்கையில், வாஷிங் மெஷின், இருசக்கர வாகனம், வருடத்திற்கு 6 சிலிண்டர் கொடுப்பதாக சொன்னோம், வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தருவதாக சொன்னோம். தமிழகத்தில் நூற்றுக்கு 95 சதவீதம் பேர் செல்போன் வைத்திருந்ததால் கொடுப்பது வீணாகக்கூடாது என்பதால் நாங்கள் வழங்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

click me!