Breakingnews: கொரோனா தொற்று அதிகரிப்பு... 2 நாட்கள் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2021, 11:03 AM IST
Highlights

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவயை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து வருகிற சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அதிகரிப்பு எதிரொலியால் கேரளாவில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவயை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

click me!