அட கடவுளே.. மூன்றாவது அலை தொடங்கிடுச்சா.? மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவரச கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2021, 10:42 AM IST
Highlights

நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 131 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. 

இது திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடுவதை கண்காணிப்பதுடன் அங்கு  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாக கடைபிடிப்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

நாட்டில் உச்சத்திலிருந்த கொரோனா இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.  இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதியில்  மூன்றாவது  அலை தாக்க வாய்ப்பிருப்பதாக ஐசிஎம்ஆர் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு எச்சரித்து விடுத்துவருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகளும்  தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போதைய மூன்றாவது அலையின் அறிகுறிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிய தொடங்கியுள்ளது.  குறிப்பாக கேரள மாநிலத்தில் மீண்டும் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில், கொரோனா தொற்று  மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 

என்றும் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 131 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் நாட்டில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 436 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் கேரளாவில் மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், முகக்கவசம் அணிதில் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேரளாவிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் பரவும் என்பதனால் அரசு ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் முன்எச்சரிக்கை விடுத்து வருகிறது, இதற்கிடையில் மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

 

அதில் கூறியிருப்பதாவது:  திருவிழா மற்றும் பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் அதிகமாக கூடகூடிய இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது, இருப்பினும் நாளொன்றுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை, பாதிக்கபட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிய வேண்டும். அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதில் அறிவுருத்தப்பட்டுள்ளது. 
 

click me!