இதைத் தானே ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்க்குது... மத்திய அரசு தரப்போகும் இன்ப அதிர்ச்சியை சொன்ன அண்ணாமலை.!

By Thiraviaraj RMFirst Published Jul 29, 2021, 10:23 AM IST
Highlights

தி.மு.க.வின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் பேசிய அவர், ‘’தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 75 நாட்கள் கடந்தும், முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இருந்து, 'நீட்' தேர்வு வரை, அனைத்தையும் கூறி விட்டு, அதற்கெல்லாம் ஒரு காரணத்தை, தற்போது சொல்லி வருகின்றனர். தி.மு.க.,வினர், மீனவர்களுக்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகளை கண்டித்து, பா.ஜ., மீனவர் அணி சார்பில், நாளை போராட்டம் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதம், டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு தயார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கோரிக்கை வைப்பாரா? என்று கேட்க விரும்புகிறேன்.

தி.மு.க.வின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவே அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.  அ.தி.மு.க.வின் இந்த போராட்டத்தை பா.ஜ.க. வரவேற்கிறது’’ என அவர் கூறினார்.

click me!