தட்டித் தூக்கிய சென்னை.. மின்னல் வேகத்தில் பணிகள்.. மக்கள் வெரி ஹேப்பி.. ஹேப்பி..

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2021, 9:00 AM IST
Highlights

நேற்று 2,15,810 கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வந்தது அதனை தேவைக்கேற்றவாறு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பபட்டுள்ளது.  குறிப்பாக சென்னைக்கு மட்டும் 35,010 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுபாடு தொடர்ச்சியாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவே தமிழகத்திற்கு வந்திருக்கும் நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்துக்கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசி போடுவதற்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது இந்த நிலையில், 

நேற்று 2,15,810 கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வந்தது அதனை தேவைக்கேற்றவாறு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பபட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு மட்டும் 35,010 கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக காலை முதலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். 

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது சென்னையில் தடுப்பூசி குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக தடுப்பூசி வந்து கொண்டு இருக்கும் நிலையில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்திற்கு தற்போது வரையும் 2,12,63,440 தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் நேற்று வரை 2,03,12,889 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 30,51,640 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!